தமிழக அரசுக்கு டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் கணிசமான வருமானம் கிடைத்து வருகிறது. பூரண மதுவிலக்கு என்ற கொள்கையை வைத்திருந்தாலும், மதுபான விற்பனையை தமிழக அரசு முழுமையாக கைவிட முடியவில்லை.
ஆனாலும் சில காலகட்டத்தில் படிப்படியாக டாஸ்மாக் மதுபானக் கடைகளை தமிழக அரசு மூடியுள்ளது. தமிழகத்தில் சுமார் 6 ஆயிரம் டாஸ்மாக் மதுக்கடைகள் இருந்த நிலையில் தற்போது 4 ஆயிரத்து 126 மதுபானக் கடைகள் மட்டுமே உள்ளன.
பிராந்தி, விஸ்கி, ஜின், ரம், பீர் ஆகிய மது வகைகளை மதுபானப் பிரியர்கள் விருப்பமுடன் வாங்கி அருந்துகின்றனர். மதுபானத்தைப் பொறுத்தவரை, அதை பழகிவிட்டாலோ அல்லது மதுவுக்கு அடிமையாகிவிட்டாலோ அதன் விலையைப் பற்றி ஏழை முதல் பணக்காரர் வரை கவனத்தில் கொள்வதில்லை.