ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகப்வரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.
அப்போது, அங்குள்ள பகுதி ஒன்றில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். செய்தி பதியப்படும் நேரம் வரையிலும் கிடைத்த தகவல்களின் படி இந்த துப்பாக்கிச்சண்டை நீடித்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன.