ரஷ்ய அதிபர் புதினை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

 

ரஷ்ய அதிபர் புதினை சந்திப்பதற்கான சாத்தியக்கூறுகளை எதிர்நோக்கி கொண்டு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டொனால்டு டிரம்பிடம், ரஷ்ய அதிபரை சந்திக்க இருப்பதாக வெளியாகும் யூகங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதிலளித்த டொனால்டு டிரம்ப், அதற்கான (புதினுடான சந்திப்பு) சாத்தியக்கூறுகளை எதிர்நோக்கி கொண்டு இருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

முன்னதாக, நேற்று அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப்- ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வது பற்றி ஆலோசனை செய்ய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான்பால்டன், அடுத்த வாரம் மாஸ்கோ செல்ல உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்து இருந்தது கவனிக்கத்தக்கது.

அண்மையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் உடன் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்புக்கு பிறகு, கருத்து தெரிவித்த டொனால்டு டிரம்ப், பிற உலக தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்து இருந்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here