ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவான இந்த நில நடுக்கத்தால் பாதிப்புகள் உண்டா என்பது தெரியவரவில்லை.

* ஈராக் தலைநகர் பாக்தாத்தின் அல்தார்மியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் நுழைந்து கண்மூடித்தனமாக சுட்டார்கள். இதில் குண்டு பாய்ந்து 8 பேர் பலியாகினர். 14 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

*லிபியாவில் திரிபோலி நகரில் உள்ள தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் நேற்று நடந்த தாக்குதலில் 7 பேர் பலியாகினர். அவர்களில் 3 பேர் தேர்தல் கமிஷன் ஊழியர்கள், 4 பேர் பாதுகாப்பு படையினர் ஆவார்கள்.

* இஸ்லாமாபாத் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்று ஆவேசமாக பேசினார். அப்போது அவர், முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரியும், முன்னாள் கிரிக்கெட் வீரரும், பி.டி.ஐ. கட்சியின் தலைவருமான இம்ரான் கானும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்ற அர்த்தம் தொனிக்கும் வகையிலான வார்த்தைகளை கூறி சாடினார். தன்னை கோர்ட்டு தகுதி நீக்கம் செய்ததுபற்றி குறிப்பிடுகையில், இதற்கு மக்கள் ஓட்டுகளால் பதில் தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

* அமெரிக்காவின் கலிபோர்னியாவில் போதையூட்டுகிற வலி நிவாரணி மருந்துகளை நோயாளிகளுக்கு சட்டவிரோதமாக பரிந்துரை செய்ததாக இந்திய டாக்டர் சுவதந்தர குமார் சோப்ரா கைது செய்யப்பட்டு உள்ளார்.

* வடகொரியாவுடன் சமரச உடன்பாடு செய்துகொண்டாலும், தங்கள் நாட்டில் அமெரிக்க படைகள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று தென்கொரிய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் கிம் புய் கியியோம் கூறி உள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here