உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உச்ச நீதி மன்ற நீதிபதிகளை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான, மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் தேர்வு செய்து, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கும். இதை மத்திய அரசு பரிசீலித்து, ஒப்புதல் அளிப்பது, பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது.

இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப்பை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க தலைமை நீதிபதி தலைமையிலான ‘கொலிஜியம்’ சிபாரிசு செய்திருந்தது. ஆனால், அந்த சிபாரிசு தொடர்பான கோப்புகளை கொலிஜியத்துக்கே மத்திய அரசு திருப்பி அனுப்பி விட்டது. முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கூறியுள்ளது. இந்த விவகாரம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப் மற்றும் செலமேஷ்வர் ஆகியோர் தலைமை நீதிபதிக்கு, தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி கடிதம் எழுதியிருந்தனர்.

இந்த நிலையில், இன்று கொலீஜியம் கூடி ஜோசப் நியமனம் தொடர்பாக முடிவு எடுக்க உள்ளது. நீதிபதி ஜோசப்பை கொலிஜீயம் மீண்டும் பரிந்துரைக்கும் என்று கூறப்படுகிறது. முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம் லோதா இது பற்றி கூறுகையில், “ கொலிஜியம் என்ன முடிவு செய்யும் என்பது குறித்து பேசுவது முதிர்ச்சியற்றது” என்றார். இருந்த போதிலும், கொலிஜியம் தனது முடிவு மாற்றிக்கொள்வதற்கு எந்த காரணமும் இல்லை என சூசகமாக தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here