ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறிய பின்னர் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல பிரித்தானியர்கள் இனி சிறப்பு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புது திட்டம் ஒன்று அமுலுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளுக்கும் பொருந்தும் எனவும், தலா 6 பவுண்ட்ஸ் விசா கட்டணமாக வசூலிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்ட விசாவின் காலாவதி 3 ஆண்டுகள் வரை அல்லது பாஸ்போர்ட்டின் காலாவதி முடியும் வரையோ இருக்கும் எனவும் தெரிய வந்துள்ளது.

அத்துடன், ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் பிரித்தானியர்களின் தனிப்பட்ட தகவல்களும் சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள குடிவரவு அலுவலகங்களில் பகிர வேண்டும்.

 

குற்றவியல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால் அதையும் பிரித்தானியர்கள் தெரியப்படுத்த வேண்டும் எனவும் புதிய சட்டத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சிறப்பு கட்டணம் மற்றும் தனிப்பட்ட தகவல்களை திரட்டுவது, ஐரோப்பிய நாடுகளில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கவும், ஐரோப்பிய நாடுகள் குற்றவாளிகளின் புகலிடமாக மாறக்கூடது என்பதற்காவுமே என குறிப்பிட்டுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதால் ஏற்படும் 11.5 பில்லியன் பவுண்ட்ஸ் நிதி பற்றாக்குறையை ஈடுகட்டவே குறித்த சிறப்பு கட்டண திட்டத்தை அமுல் படுத்த உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த திட்டமானது பிரித்தானியாவுக்கு மட்டுமல்ல ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினரல்லாத அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் குறித்த திட்டத்தால் பிரித்தானியர்கள் உள்ளிட்ட 39 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் சிறப்பு கட்டணமாக 6 பவுண்ட்ஸ் செலுத்த நேரிடும் என கூறப்படுகிறது.

குறித்த புது திட்டத்தில், சுற்றுலாப்பயணிகள் தங்கள் செல்லும் நாட்டினை குறிப்பிட்டு தங்களின் தனிப்பட்ட மற்றும் பாஸ்போர்ட் தகவல்களை இணையம் வழியாக பதிவு செய்ய வேண்டும்.

பின்னர் சிறப்பு அதிகாரிகளால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு 4 வாரங்களுக்குள் அனுமதிப்பது தொடர்பில் தகவல் தெரிவிக்கப்படும்.

கடந்த ஆண்டு இதேபோன்ற ஒரு திட்டத்தை பிரித்தானிய எம்.பி Craig Mackinlay மே அரசுக்கு கோரிக்கையாக வைத்தார்.

அதன்படி பிரித்தானியாவில் வருகைதரும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் சுற்றுலாப்பயணிகளிடம் இருந்து தலா 10 பவுண்ட்ஸ் சிறப்பு கட்டணமாக வசூலிப்பது.

இதனால் ஆண்டுக்கு 150 மில்லியன் பவுண்ட்ஸ் தொகையை வருவாயாக ஈட்ட முடியும் எனவும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here