கனடாவில் இலங்கையர்கள் இருவர் உள்ளிட்ட எட்டுபேரை கொலை செய்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை எதிர்வரும் 23ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் 66 வயதான புரூஸ் மெக் ஆத்தர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினம் டொரென்டோ நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது சந்தேகநபருக்கு எதிராக எட்டு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில், சந்தேகநபருக்கு எதிராக மேலதிக ஆதரங்களை சமரப்பிக்க உள்ளதாக அந்நாட்டு சட்டமா அதிபர் காரியாலயம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் இருந்து அகதிகளாக கனடாவிற்கு சென்ற ஸ்கந்தராஜா நவரணம் மற்றும் கிருஷ்ணகுமார் கனகரத்தினம் ஆகிய இருவரும் வெவ்வேறு காலப்பகுதிகளில் குறித்த சந்தேகநபரினால் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here