பிரித்தானிய இளவரசர் ஹரியின் சொத்து மதிப்பு, மெர்க்கலை திருமணம் செய்துகொண்ட பின்னர் 30 மில்லியன் டொலராக அதிகரிக்கவுள்ளது.

தற்போதைக்கு இளவரசர் ஹரியின் சொத்து மதிப்பு 25 மில்லியன் டொலர் ஆகும். மெகன் மெர்க்கல் தனது தொழில் மூலம் சம்பாதித்த சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 5 மில்லியன் ஆகும்.

ஹரி- மெர்க்கல் திருமணத்திற்கு பின்னர் ஹரியின் சொத்து மதிப்பு மெர்க்கலின் சொத்தோடு சேர்த்து 30 மில்லியன் டொலர் ஆகும்.

இளவரசர் வில்லியம் மற்றும் ஹரி ஆகிய இருவருக்கும் தங்களது தந்தை சார்லஸிடம் இருந்து ஒவ்வொரு வருடமும் 7 பிரிவுகளாக பணம் கொடுக்கப்படுகிறது. இது அவர்களது பயணம் செலவு மற்றும் இதர செலவுகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.

2016- 2017 ஆம் ஆண்டில் மட்டும் தந்தை சார்லஸ், வருடாந்திர செலவாக இளவரசர் ஹரிக்கு 5 மில்லியன் டொலர் கொடுத்துள்ளார்.

ஹரியின் 21 வயதிலிருந்து தனது தாய் டயானாவுக்கு சொந்தமான எஸ்டேட்டின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 450,000 டொலர் முதலீட்டு லாபம் கிடைக்கிறது. மேலும் 10 மில்லியன் டொலர் மதிப்பிலான தாயின் பரம்பரை சொத்துக்கள் ஹரி மற்றும் வில்லியம்க்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி 10 ஆண்டுகளாக பிரிட்டிஷ் ராயல் விமானப்படையில் இருந்துள்ளார். இதற்காக ஹரி பெற்றுள்ள ஆண்டு வருமானம் 50,000 டொலர் ஆகும்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here