உத்தர பிரதேசத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதியது. இந்த பயங்கர விபத்தில் 11 மாணவர்கள் பலியாகினர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள குஷிநகர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து, ரயில் மீது மோதியது. இந்த கோர விபத்தில் பள்ளி மாணவர்கள் 11 பேர் பலியாகினர். ரயில் வருவதை கவனிக்காமல் ஆளில்லா ரயில்வே கிராசிங்கை பேருந்து ஒட்டுநர் கடக்க முற்பட்டுள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த ரயில், பள்ளி வேன் மீது அசூர வேகத்தில் மோதியது.
ரயில் மோதியதில் பள்ளி வேன் தூக்கி வீசப்பட்டது. வேனில் இருந்த பள்ளி மாணவர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காயம் அடைந்த சிறுவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.