அமர்நாத் யாத்திரை ஜூன் 28 ஆம் தேதி துவங்குகிறது. புனித யாத்திரை செல்வதற்கான முன்பதிவு நாடு முழுவதிலும் நடைபெற்று வருகிறது.
தெற்கு காஷ்மீரில் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள அமர்நாத் புனிதஸ்தலம் செல்வதற்கான யாத்திரை ஜூன் 28-ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த யாத்திரையானது 60 நாள்களுக்கு நடைபெறவுள்ளது. குறிப்பாக, ரக்ஷா பந்தன் கொண்டாடப்படும் ஆகஸ்ட் 26-ஆம் தேதி பக்தர்களின் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
;நாடுமுழுவதிலும் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி, யெஸ் வங்கி மற்றும் ஜம்மு-காஷ்மீர் வங்கி ஆகியவற்றின் கிளைகளில் யாத்திரைக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. இதுவரை நாடு முழுவதிலும் ஒரு லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
அமர்நாத் கோவிலுக்கு ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொள்வதற்கான முன்பதிவு வெள்ளிக்கிழமை (ஏப்.27) தொடங்குகிறது. இவை தவிர ஜம்முவில் உள்ள வைஷ்ணவி கோவில், சரஸ்வதி கோவில் உள்ளிட்ட நான்கு இடங்களில் யாத்திரை நடைபெறும் காலத்தில் நேரில் பதிவு செய்து கொள்ளலாம் என்று அமர்நாத் கோவில் அதிகாரி தெரிவித்தார்.