சிரியாவில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலின் போது அங்கு வைக்கப்பட்டிருந்த இரண்டு சக்தி வாய்ந்த ஏவுகணைகள் ரஷ்யாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் அரசு ரசாயன தாக்குதலை மேற்கொண்டதாக கூறி அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் சிரியாவில் தாக்குதல்கள் நடத்தின.
இந்த தாக்குதலில் அமெரிக்கா 103 சீர்வேக ஏவுகணைகளை உபயோகப்படுத்தியதாக கூறப்படும் நிலையில் வெடிக்காமல் இருந்த இரண்டு ஏவுகணைகளை சிரியா கைப்பற்றியுள்ளது.
கைப்பற்றப்பட்ட ஏவுகணைகள் நல்ல நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் கப்பல் மூலம் ரஷ்யாவுக்கு அனுப்பட்டு புடின் ராணுவ முகாமில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த ஏவுகணைகளை வைத்து ரஷ்யா என்ன செய்யும் என்று முழுவதுமாக தெரியவில்லை. தங்கள் ராணுவ விடயங்களுக்கு ரஷ்யா அதை பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது. சிரியா நடத்திய ரசாயன தாக்குதலால் தான் இந்த விடயம் தொடங்கிய நிலையில், அது போன்ற தாக்குதலை நடத்தவில்லை என சிரியாவும், ரஷ்யாவும் மறுத்தது குறிப்பிடத்தக்கது.