கனடாவில் நாய்கடியால் பாதிக்கப்பட்ட சிறுவனை, மருத்துவர் ஒருவர் வெறிநாயின் உமிழ்நீரைக் கொண்டு குணப்படுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கனடாவைச் சேர்ந்த ஜோனா என்ற 4 வயது சிறுவன் நாய்கடியால் பாதிக்கப்பட்டிருந்தான். இதனால், அவனின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது.

 

ஜோனா இருளைக் கண்டால் பயப்படுவான், 3 மணிநேரங்களுக்கு மேல் தூங்காத அவன், மாமிச உணவுகளை மட்டும் முகர்ந்து பார்த்துவிட்டு உண்கிறான். சில நேரங்களில் குரைக்கவும் செய்கிறான், பள்ளியில் சக மாணவர்களிடம் மூர்க்கத்தனமாக நடந்து கொள்கிறான்.

ஜோனாவின் நிலையை அவனது பெற்றோர், விக்டோரியாவில் இயற்கை மருத்துவராக பணியாற்றி வரும் Anke Zimmermann-யிடம் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, வெறிநாயின் உமிழ்நீரைக் கொண்டு ஜோனாவுக்கு சிகிச்சை அளித்திருக்கிறார் மருத்துவர் Anke Zimmermann.  இதுகுறித்து தனது வலைதள பக்கத்தில் அவர் கூறுகையில்,  ‘ஜோனாவுக்கு வெறிநாய்க் கடியால்தான் இந்தப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்ற முடிவுக்கு வந்தேன். இவனுக்கு வழக்கமான மருத்துவம் இல்லாமல், வெறிநாயின் உமிழ்நீரைக் கொண்டு மருத்துவம் செய்ய முடிவெடுத்தேன்.

நாய் கடித்த இடத்தில் உமிழ்நீரை வைத்த இரண்டே நிமிடங்களில் அவனது முகத்தில் சிரிப்பைக் கண்டேன், என் மருத்துவம் வேலை செய்கிறது என்ற நம்பிக்கை வந்தது. இந்த மருத்துவத்திற்கு பெயர். மூன்று வாரங்களுக்குப் பிறகு அவனது பெற்றோரிடம் விசாரித்தேன். வீட்டில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், ஆனால் பள்ளியில் மூர்க்கமாகவே இருப்பதாகவும் கூறினார்கள்.

மீண்டும் உமிழ்நீர் மருத்துவத்தைத் தொடர்ந்து மேற்கொண்டேன். மூன்று மாதங்களுக்கு பிறகு, ஜோனா இரவைக் கண்டு பயப்படுவதில்லை. பகல் நேரங்களில் மேஜைக்கு அடியில் ஒளிந்துகொள்வதில்லை. எப்போதாவது சில நேரங்களில் மட்டுமே குரைப்பதாக கூறினார்கள். முன்பு முழுக்க முழுக்க நாயின் தன்மையோடு இருந்த ஜோனா, இப்போது பெரும்பாலும் மனிதத் தன்மையோடு மாறியிருப்பதைக் கண்டு நான் நம்பிக்கையும், மகிழ்ச்சியும் கொண்டேன். மருத்துவம் ஆரம்பித்து 6 மாதங்களாகிவிட்டன. இப்போது ஜோனா இயல்பான, அமைதியான சிறுவனாக மாறியிருக்கிறான். இயற்கை மருத்துவத்தில் வெறிநாய்க் கடியையும் குணப்படுத்த முடியும் என்பது இப்போது நிரூபணமாகிவிட்டது.

இன்னும் சில வித்தியாசமான பிரச்சனைகளை நான் குணப்படுத்தியிருக்கிறேன். இந்த விவரங்களை என் வலைத்தளத்தில் படித்துக் கொள்ளலாம்’ என தெரிவித்துள்ளார். ஆனால், Anke Zimmermann இந்த மருத்துவமுறை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், வெறிநாயின் மூச்சுக் காற்று மனிதர்களின் காயங்கள் மீது பட்டாலே பாதிப்பு வரும் என்பார்கள். அப்படி இருக்கையில் அதன் உமிழ்நீரைக் கொண்டு மருத்துவம் செய்துள்ளது கண்டனங்களை எழுப்பியுள்ளது. எனினும், பிரிட்டிஷ் கொலம்பியா இயற்கை மருத்துவக் கல்லூரி Anke Zimmermann-க்கு ஆதரவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here