லண்டனிலிருந்து ஸ்பெயின் நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில் இரு பெண்கள் சண்டை போட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

குறித்த விமானத்தில் பயணம் செய்த இரண்டு தோழிகளுக்கு இடையே திடீரென சண்டை ஏற்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் தலை முடியை பிடித்து இன்னொருவர் இழுத்துள்ளார்.

இதை பார்த்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்த நிலையில் சண்டையை பார்த்த பயத்தில் பெல்லா என்ற பத்து வயது சிறுமி அலறியுள்ளார்.

உடனடியாக அங்கு வந்த விமான ஊழியர்கள் சண்டையை விலக்கிவிட்டனர்.இதையடுத்து விமானம் ஸ்பெயினில் வந்து இறங்கிய போது பொலிசார் இது குறித்து விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக விமான நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here