பெண் குழந்தையை பெற்ற பெற்றோர்களை மட்டும் இல்லை, ஒட்டுமொத்த மக்களையும் கண்ணீர் சிந்த வைத்துள்ள காஷ்மீரில் ஆசிஃபாவிற்கு நடந்த துயரம். குதிரை மேய்த்துக் கொண்டிருந்த சிறுமியை கடத்தி சென்று, கோயில் கருவறையில் மூன்று நாட்கள் கட்டி வைத்துள்ளன. அதன் பின்பு அவரின் வாயில் தொடர்ந்து தூக்க மாத்திரைகளை திணித்து 3 நாட்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

ஜனவரி 10 ஆம் தேதி காணமால் போன ஆசிஃபா, 5 நாட்கள் கழித்து பிணமாக கிடைத்தார். முதலில் இந்த வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட காவல் அதிகாரி, தீபக் கஜூரியா பின்பு இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது மீண்டும் ஒரு அதிர்ச்சியை தந்தது.

 

பின்பு, கைதான அதிகாரியை விடுவிக்கக்கோரி இந்து ஏக்தா மஞ்ச் அமைப்பினர் பிப்ரவரி 16ஆம் தேதி ஜம்மு நகரில் தேசியக்கொடியுடன் ஊர்வலம் நடத்தினர். அதில் சில பாஜக அமைச்சர்களும் கலந்து கொண்டனர். கைதான குற்றவாளிக்காக தேசியக் கொடியுடன் ஊர்வலம் சென்றது அரசியல் தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

பல போராட்டங்களை கடந்து தற்போது ஆசிஃபா விவகாரம் வெளியே தெரிந்து, 8 வயது சிறுமிக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ மிகவும் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், மசூதிக்குள் வைத்து 7 வயது சிறுமியை மதகுரு பலவந்தபடுத்த முயன்றுள்ளார். இந்த விடயமறிந்த சிறுமியின் பெற்றோர்கள் சிறுமியுடன் மசூதி சென்று தாறுமாறாக மதகுருவை தாக்கியுள்ளனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், மதகுரு என தெரிந்தும் சம்பவத்தை மூடி மறைக்காமல் தைரியமாக அவரை தண்டித்ததற்கு சிறுமியின் பெற்றோர்களுக்கு பாரட்டு தெரிவித்து வருகின்றனர்.

#மசூதியில் வைத்து தனது 7வயது மகளை பலவந்தப்படுத்த முயன்ற காமவெறி பிடித்த இமாம்… மகளுடன் சேர்ந்து அடித்து துவைத்த அக்குழந்தையின் தாயார்..👏👏👏👌

Posted by அய்யய்யோ on Monday, April 16, 2018

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here