கடந்த 2017ஆம் ஆண்டு மட்டும் வீடு அற்ற 100 பேர் உயிரிழந்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரொறன்ரோ பொதுச் சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நகர நிர்வாகத்தால் நடாத்தப்படும் தங்குமிடங்களில் தங்கியோர் அல்லது ஒருமுறை அதில் தங்க வந்தோர் என மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே பெரும்பாலான உயிரிழப்புக்கள் சம்பவித்துள்ளதாக அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவ்வாறு உயிரிழந்தவர்களுள் பெரும்பாலானவர்கள் ஆண்கள் என்றும், அவ்வாறு உயிரிழந்தவர்களின் சராசரியான வயது 48 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதீத போதைப் பாவனை, மாரடைப்பு மற்றும் புற்றநோய் என்பனவே அவர்களின் இந்த மரணங்களுக்கு காரணம் என்றும் அறியப்பட்டுள்ளது.