பாகிஸ்தானை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தங்கத்தால் செய்யப்பட்ட காலணிகள் மற்றும் Crystal Tie அணிந்து சமூகவலைதளங்களில் டிரெணடாகியுள்ளார்.

சல்மான் சாகித் என்ற தொழிலதிபர், தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், 17 லட்சம் மதிப்புள்ள தங்கத்தால் செய்யப்பட்ட ஷீ, 63,000 மதிப்பிலான Crystal மற்றும் தங்கத்தால் செய்யப்பட்ட Tie ஆகியவற்றை அணிந்து வந்து மணமகளை ஒரம்கட்டியுள்ளார்.

எப்போதும், மணமகளின் ஆடைகள் தான் ஆடம்பரமாக இருக்கும். ஆனால் இந்த திருமணத்தில் மணமகன் தங்கத்தால் ஜொலித்துள்ளார்.

காலணிகள், ஆடை மற்றும் Crystal Tie என அனைத்தும் சேர்த்து மொத்த மதிப்பு 25 லட்சம் ஆகும். எதற்காக இவ்வாறு ஆடம்பரமான ஆடை என்பதற்கு இவர் அளித்த விளக்கம், நான் எப்போதும் தங்கத்தால் செய்யப்பட்ட காலணிகளை அணி விரும்பினேன்.

மக்கள் எப்போதும் தங்கத்தை க்ரீடமாக நினைப்பார்கள். ஆனால் தங்கம் என்பது காலுக்கு அடியில் உள்ள அழுக்கு போன்றது என்பதை மக்களுக்கு காட்டுவதற்காக இவ்வாறு செய்தேன் என கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here