இந்தியாவில் பொதுக் குழாயில் தண்ணீர் வழங்க மறுத்த சிலர் சிறுமியை தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் அருகில் உள்ள பய்னா என்ற கிராமத்தை சேர்ந்தவர் நிதி (16) . இவர் நேற்றிரவு அங்குள்ள பொது குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றார்.

அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் எங்கள் ஏரியாவில் வந்து தண்ணீர் பிடிக்கக்கூடாது என சிறுமியிடம் கூறியுள்ளனர்.

இதையடுத்து சிறுமிக்கும் அந்த கும்பலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் எங்களை மீறி தண்ணீர் பிடித்தால் கடும் விளைவுகளை சந்திக்கக்கூடும் என எச்சரித்தனர்.

 

ஆனால் அதையும் மீறி சிறுமி தண்ணீர் பிடித்த நிலையில், ஆத்திரத்தில் அவரை தாக்கிய கும்பல் பின்னர் தீயிட்டுக் கொளுத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இதையடுத்து படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் ஒருவரை மட்டும் கைது செய்துள்ள நிலையில் தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகிறார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here