கத்துவா சிறுமி ஆஷிபா வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த ரணம் ஆறுவதற்குள் சூரத்தை சேர்ந்த அடையாளம் தெரியாத சிறுமி 8 நாட்களாக அடைக்கப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சித்திரவதை செய்யப்படது போல் பல்வேறு காயங்கள் சிறுமியின் உடலில் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தில் 9 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத சிறுமி உடலில் காயங்களுடன் சடலமாக மைதானத்தில் கிடப்பதாக அங்கு நடைபயிற்சிக்கு சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அமைந்தனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் அந்த சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் அந்த சிறுமி 8 நாட்களாக துன்புறுத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் அவரது உடலில் சித்திரவதை செய்யப்பட்டதற்கான அடையாளமாக 80-க்கும் மேற்பட்ட காயங்கள் இருந்ததும் கண்டடுபிடிக்கப்பட்டது.

அந்த காயங்கள் யாவும் சமீபத்தில் ஏற்பட்ட காயங்கள் அல்ல அவை ஒரு வாரத்திற்கு முன்னர் ஏற்பட்ட காயங்கள் என சிறுமியின் உடலை 5 மணி நேரத்திற்கும் மேல் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து பேசிய பொலிஸ் அதிகாரி கே.பி. ஜாலா, காலையில் நடைப்பயிற்சி செல்லும் பொதுமக்கள் அருகில் உள்ள மைதானம் ஒன்றில் சிறுமி உடல் கிடந்தது குறித்து தகவல் கொடுத்தனர். உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு உடனடியாக விசாரனையில் இறங்கியுள்ளோம்.

ஆனால் சிறுமியை பற்றிய எந்த ஒரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை ஆனால் விரைவில் ஆதாரங்களை திரட்டி குற்றவளிகளை கைது செய்வோம் என அவர் கூறினார்.

காஷ்மீரில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 16 வயது சிறுமி பாஜக எம்எல்ஏவால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவங்கள் அதிர்ச்சியே இன்னும் விலகாத நிலையில் சூரத்தில் இப்படி சம்பவம் நிகழந்திருப்பது பெண் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here