சிரியாவின் மீதான தாக்குதலை திட்டமிட்டபடி மேற்கொள்ள துணைபுரிந்த பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் இராணுவத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

சிரியாவின் மீதான தாக்குதலை பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் உதவி  இல்லாமல் சிறந்த முறையில் முன்னெடுத்திருக்க முடியாது எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அதிநவீனப்படுத்தப்பட்டுள்ள அமெரிக்க நாட்டின் மிக உயர்ந்த இராணுவத்தை நினைத்துப் பெருமைப்படுகின்றேன்.  நமக்கு இணையாகவும், நெருக்கமாகவும் வேறு எதுவும், யாரும் இருக்கவே முடியாது எனவும் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று (14) மாலை குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here