இஸ்ரேல் காஸா எல்லையில் தற்போது 3 ஆவது வாரமாக ஆயிரக் கணக்கான பாலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை இந்த ஆர்ப்பாட்டத்தின் போது இஸ்ரேல் இராணுவத்துக்கும் போராட்டக் காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் கலவரமானது. கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி முதல் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தின் போது இதுவரை நிகழ்ந்த வன்முறையில் 33 பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப் பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

வெள்ளிக்கிழமை எல்லைக்கு அப்பால் இஸ்ரேல் இராணுவம் மீது பாலஸ்தீன இளைஞர்கள் கற்களை வீசிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பதிலுக்கு இஸ்ரேல் துருப்புக்கள் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர். இத்தினத்தில் மாத்திரம் கலவரத்தின் போது 300 இற்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்துள்ளதாக காஸா சுகாதாரத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 1976 ஆம் ஆண்டு யூதக் குடியேற்றத்தை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்ட 6 பாலஸ்தீன இளைஞர்களை இஸ்ரேல் சுட்டுக் கொன்றதன் 42 ஆவது தினத்தை ஒட்டியே தமது நிலங்களை மீட்கும் முக்கிய நோக்கத்தை அடிப்படையாக வைத்து மார்ச் 30 தொடக்கம் ஆயிரக் கணக்கான பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது காஸா எல்லையில் உள்ள தடுப்பு வேலியைத் தாண்டி பாலஸ்தீனர்கள் அத்து மீறி நுழைய முயன்றதாகக் கூறி இஸ்ரேல் இவர்கள் மீது துப்பாக்கிச் சூடும், ரப்பர் குண்டுத் தாக்குதலும், கண்ணீர்ப் புகைக் குண்டுத் தாக்குதலும் நிகழ்த்தியதில் தான் இதுவரை 33 பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகின்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here