சுவிட்ஸர்லாந்து – இத்தாலி எல்லைப் பகுதியில் வைத்து ஜேர்மன் Tengalmann பிரபல வர்த்தக நிறுவனத்தின் தலைவரை கடந்த சனிக்கிழமை முதல் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, Tengalmann நிறுவனத்தின் தலைவரான 58 வயதான கார்ல் எவரின் ஹயுப் என்பவரே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Valais மாகாணத்தின் சுவிஸ் – இத்தாலி எல்லைப்பகுதியில் அமைந்துள்ள Matterhorn மலைப் பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே இவர் பனிப்பாறைகளுக்குள் சிக்குண்டு காணாமல் போய்யுள்ளதாக தெரிக்கப்படுகின்றது.

கடல்மட்டத்தில் இருந்து 3883 மீற்றர் உயரத்தில் உள்ள Zermatt பகுதியில் சனிக்கிழமை காலை பனிச் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே இவர் காணாமல் போயுள்ளார்.

இவருடைய கையடக்க தொலைபேசி காலை 8.33 மணியுடன் செயழிலந்துள்ளதாகவும்” ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் Tengalmann நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

“பனிச்சறுக்கு மற்றும் மலை ஏறுதல் போன்றவற்றில் தமது தலைவர் நன்கு தேர்ச்சி பெற்றவர் என்றவகையில் இவர் நான்கு தினங்களாகியும் காணாமல் போயுள்ளதாகவே தாம் கருதுகின்றோம்.

இந்நிலையில், காணாமல் போனவரை தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் மனிதனால் முடிந்த சகலவிதமான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here