அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க முடியாது என தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

 

தமிழக அரசியல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”அ.தி.மு.க.வை பொறுத்தவரை எளிய தொண்டன்தான் தலைமை பொறுப்புக்கு வர முடியும். தலைமை கழகம் யாருக்கு சொந்தம் என்று தற்போது தெளிவுபடுத்த முடியாத நிலை உள்ளது.

நீதிமன்ற உத்தரவுப்படி தலைமைக்கழக அலுவலகத்தில் சாவி கொடுக்கப்பட்டது. இதுகுறித்து மேல் முறையீடு செய்தபோது 2 வாரங்களில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.

அ.தி.மு.க.வில் உள்ள உண்மையான தொண்டன் எதிர்பார்ப்பை பிரதிபலிக்கும் வண்ணம் கோர்ட்டு தீர்ப்பு அமையும். தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் நடைபெற்று வருகிறது.

என்னுடைய பங்களிப்பு குறித்து ஒருங்கிணைப்பாளர்தான் முடிவு எடுப்பார். டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு நடைபெறுமா? என்பது தொண்டர்களின் மனதை பொறுத்து அமையும்.
கட்சியில் இருக்கும் கருத்து வேறுபாடுகளை தாண்டி தற்போது வரை அ.தி.மு.க. எம்.பி.யாக நான் மக்களவையில் பணியாற்றி வருகிறேன். அ.தி.மு.க. பொதுக்குழு குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. “ என தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here