46வது தேசிய விளையாட்டு விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட ஆண் அழகன் விளையாட்டு விழாவில் ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவன எம்.எம்.அய்யாஷ் 55-60 கிலோ கிராம் இடைப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் 02வது இடத்தினையும் மாகாண மட்டத்தில் நடாத்தப்பட்ட போட்டியில் 03ம் இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவ் விளையாட்டு போட்டியானது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் நடாத்தப்பட்டது.

மாணவனை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் முதல்வர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தலைமையில் கல்லூரியில் நடைபெற்றது.

மேலும், இம் மாணவனை பயிற்சியளித்து, ஒழுங்குபடுத்திய ஓட்டமாவடி எம்.பி.சி.எஸ். வீதியில் அமைந்துள்ள ஓரியன்ட் உடற்பயிற்சி நிலையத்தினருக்கும், பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர் எம்.ஜி.எம்.அஸ்மிர் மற்றும் அதன் தலைமை பொறுப்பாளர் ஏ.ஆர்.நவாஸ் (பாடசாலை கராத்தே பயிற்றுவிப்பாளர்) ஆகியோருக்கு பாடசாலை சார்பாக நன்றியினையும், பாராட்டுக்களையும் அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் இதன்போது தெரிவித்துள்ளார்.

Gallery Gallery Gallery

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here