பைசர்-பயான்டெக் கொரோனா தடுப்பூசி விநியோகம் கிறிஸ்மஸ்க்கு முன்னதாக தொடங்கி விடும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பைசர், ஜேர்மனியின் பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி, 3ஆவது கட்ட சோதனையில், தீவிரமான பக்க விளைவுகள் ஏதுமின்றி 95 சதவீதம் பலனை தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அவசரகால பயன்பாட்டிற்கு இந்த கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அவசரகால பயன்பாட்டிற்கும் ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை அடிப்படையிலும் டிசம்பரின் பிற்பாதியில் அங்கீகாரம் வழங்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திட்டமிட்டபடி அனைத்தும் நல்லபடியாக நடைபெற்றால் கிறிஸ்மஸ்க்கு முன்னதாக விநியோகம் தொடங்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here