மஸ்கெலியா சுகாதார பரிசோதகர் பிரிவுக்கு உட்பட்ட நோட்டன் பிரிஜ் ஒஸ்போன் தோட்டத்தில் மிடிபோட் பிரிவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
36 வயதுடைய ஆண் ஒருவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
குறித்த நபர் கௌனிய சீனி வியாபார நிலையம் ஒன்றின் களஞ்சியசாலையில் தொழில் புரிந்துள்ளார். இவர் கடந்த 15.11.2020 அன்று பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அதன் பெறுபேறு பெற்றுக் கொள்வதற்கு முன்பதாக கடந்த 16.11.2020 அன்று யாருக்கும் அறிவிக்காமல் நோட்டன் பகுதிக்கு தனது இல்லத்திற்கு வருகை தந்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவரிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகளின்படி அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மஸ்கெலியா சுகாதார வைத்திய பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

இவருடன் தொடர்பில் இருந்தவர்களை இனம் கண்டு அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.கொரோனா தொற்றாளரை கொரோனா கட்டுப்பாட்டு நிலையம் ஒன்றிற்று அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here