இலங்கையில் பாணந்துறை கடற்பரப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திமிங்கிலங்கள் கரையொதுங்கியமைக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்து சமுத்திரத்தில் சில நாடுகளின் கடற்படையினர் மலபார் என்ற பெயரில் மேற்கொண்ட பயிற்சி ஒத்திகையே இதற்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 02 ஆம் திகதி பாணந்துறை கடற்கரையில் சுமார் 100 திமிங்கிலங்கள் வரை கரையொதுங்கியதோடு, அதில் 10 திமிங்கிலங்கள் வரை உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சூழலியலாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் பின்னரே குறித்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
கரையொதுங்கிய ஏனைய திமிங்கிலங்கள், பிரதேசவாசிகள், காவல் துறையினர் மற்றும் கடற்படையினரின் உதவியுடன் மீண்டும் கடலுக்குள் விடப்பட்டுள்ளதுடன், இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான், மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கடற்படையினர் குறித்த பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாக சூழலியலாளர் நயனக்க ரண்வெல்ல தெரிவித்துள்ளார்.