தற்போது வவுனியா மாவட்டத்தில் தனிமை படுத்தப்பட்ட
குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் எதுவும் வழங்காமல் மக்களின் நிலை அறியாமல் வெளியில் செல்லவும் தடை விதித்துள்ள அதிகாரிகள் இது தொடர்பில் உயர் அதிகாரிகளிடம் நாம் வினவிய போது கிராம சேவையாளர்கள் தமக்கு எந்த தகவல்களும் வழங்கவில்லை என்று அவர்களின் உயர் அதிகாரிகள் கூறுகின்றனர் நாம் ஒரு கிராம சேவையாளரை தொடர்பு கொண்ட போது தமக்கு சுகாதாரப்பிரிவினர் எந்த தகவலும் வழங்கவில்லை என பொறுப்பற்ற தனமாக கூறுகின்றனர் அவர்களுக்கு அயலவர்கள் உணவு உதவிகள் செய்வார்கள் என்று கூறினர் ஆனால் இன்று அமுலுக்கு வந்துள்ளது தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் இருந்து வெளியே வருபவர்களை அவதானிப்பதற்காக புலனாய்வாளர்களும் சுகாதார உத்தியோகத்தர்களும் கண்காணிப்பில் ஈடுபடுத்தி இருப்பதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ள இந்த நிலையில் யாராவது உதவி செய்ய முன் வருவார்களா இது தொடர்பில் உரிய அதிகாரிகள் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் இது தொடர்பில் நாம் தொடர்பு கொண்ட அதிகாரிகள் பொறுப்பற்ற தனமாக பதிலளித்தனர் ஒரு கிராம சேவையாளரிடம் சென்ற போது அவர் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது என்று பொறுப்பற்ற தனமாக பதிலளித்தார்….

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here