வைரஸ் பரவலை தடுப்பதற்கு 7 நாட்கள் முழுவதுமான நாட்டை மூடிவிடுவதற்கு நேற்றைய தினம் (1) கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தினால் நாட்டின் சாதாரண பொது மக்கள் முகம் கொடுக்கும் நிலைமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராபக்ஷவினால் தீவிரமாக அவதானம் செலுத்தப்பட்டதால் இந்த முடிவு கைவிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாளாந்த ஊதியத்தில், சிறிய வர்த்தகங்கள் மூலம் வாழ்க்கை நடத்தும் மக்களுக்கு இந்த முறையில் ஊரடங்கு அமுல்படுத்தினால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இதனால் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் பிரதேசங்களை மாத்திரம் தெரிவு செய்து தனிமைப்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
அதனடிப்படையில் பொது மக்களின் தினசரி நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படாத வகையில் இந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
