முல்லைத்தீவு கரைதுறைப்பற்றுபிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சின்னாறு பொழுதுபோக்கு பூங்காவில் இன்று நிழல்தரு மரங்கள் நாட்டிவைக்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கிருளிய தேசிய மரநடுகை திட்டத்தின் கீழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் இந்த நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

குறித்த பொழுதுபோக்கு பூங்காவின் நடைபாதை அருகே மற்றும் சூழவுள்ள பகுதிகளில் நிழல்தரு மரங்கள் நாட்டிவைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ்அச்சுறுத்தல் காரணமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி. மட்டுப்படுத்தப்பட்டவர்களின் பங்குபற்றுதலுடன் இந் நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள்இ கரைதுறைப்பற்று பிரதேச சபை செயலாளர் மற்றும் தவிசாளர்இ வனவளதிணைக்களத்தின் மாவட்ட அதிகாரி மற்றும் பிரதி மாவட்ட அதிகாரிஇ பிரதேச வனவளதிணைக்கள அதிகாரி. மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here