நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட கந்தப்பளை நோனா தோட்டத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு ஆயுர்வேத மருந்து பொருட்கள் கையளிக்கப்பட்டது.
தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆலோசனைக்கு அமைய நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் வேண்டுகோளுக்கிணங்க இவ் ஆயுர்வேத மருந்து பொருட்களை (28/10/2020)நுவரெலியா பிரதேச சபையின் ஆயுர்வேத மருத்துவ பிரிவும் கந்தப்பளை பொலீசார் மற்றும் நுவரெலியா பிரதேச சபையின் பொது சுகாதார பரிசோதகர் ஆகியோர்கள் இணைந்து வழங்கி வைத்தார்கள்.
