தாய் வீட்டுக்கு திரும்பும் நாள் வெகு தொலைவில் இல்லை!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல குழுக்களும் ஒன்றுபடும் நாள் வெகு தூரத்தில் இல்லையென அக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் பொறுப்புக்களை ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
“தற்காலிக வீடுகளுக்குச் சென்றவர்கள் தனது தாய் வீட்டுக்கு திரும்பி வரும் நாள் மிக தொலைவில் இல்லை.
இந்நிலையில், எதிர்வரும் 2020ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வெற்றி பெறச் செய்வதற்கு தமக்கு திட்டமொன்று உள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.