திருகோணமலைமாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 16 அணிகள் பங்குபற்றும் புள்ளி அடிப்படையிலான போட்டி கடந்த 31.03.2018ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது.

அதற்கமைவாக, நேற்று(16.04.2018) திங்கள் கிழமை மூதூர் Western Warriors அணியும், திருகோணமலை Quartalube அணிகள் மோதும் முதலாவது போட்டியானது காலை 9.45pm மணியளவில் Hindu College மைதானத்தில் திருகோணமலை மாவட்ட சம்மேளன தலைவர், போட்டி எற்பாட்டாளர் போன்றோர்களின் பங்குபற்றுதலுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

50 ஓவர் கிரிக்கெட் தொடரில் மூதூர் வெஸ்டர்ன் வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திருகோணமலை Quatalube அணி 41.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 173 ஓட்டங்களை பெற்றனர்.

Mutur Western Warriors அணி தரப்பில் இம்ரான், ரிப்ளான், சமீர் ஆகியோர் தலா 2 விக்கெட்களும், சதாம் மூன்று விக்கெட்களையும் வீழ்த்தினார். பின்னர் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் Mutur Western Warriors அணி ஆடத் தொடங்கியது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சயான் 3 ஓட்டங்கள், சமீர் 31 ஒட்டங்களுடன் ஆட்டமிழக்க சதாம், பஸ்மீ போன்றோர்களின் சிறப்பான இணைப்பாட்டத்தினால் சதாம் 106* ஓட்டங்கள், பஸ்மீ 23* ஓட்டங்களுடன் மூதூர் வெஸ்டர்ன் வாரியர்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 175 ஓட்டங்களை பெற்று 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

மேலும், தற்போது நடைபெற்று வரும் Division III போட்டியில் முதலாவது 100 ஓட்டத்தை கடந்த வீரர் சதாம் என்பதும் குறிப்பிடத்தக்கது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here