அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், நடப்புச் சம்பியனான ஸ்பானிய வீரர் ரபாயெல் நடால், 2 ஆவது சுற்றுடன் வெளியேறியுள்ளார்.

இன்று(புதன்கிழமை) நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் 2ஆம் சுற்றுப்போட்டியொன்றில் நடப்புச் சம்பியன் நடாலை அமெரிக்காவின் மெக்கன்ஸி மெக்டொனால்ட்   6-4, 6-4, 7-5  விகித்தில் தோற்கடித்தார்.

போட்டியின்போது நடால் உபாதைக்குள்ளாகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகில் அதிக எண்ணிக்கையான ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டங்களை வென்றவர் நடால் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here