சர்வதேச கிரிக்கெட் சபையால் நடத்தப்படும் மகளிர் இளையோருக்கான (19 வயதுக்கு உட்பட்டோர்) முதலாவது ரி-20 உலகக்கிண்ணத் தொடர் இன்று (சனிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.

தென்னாபிரிக்காவின் பெனோனி, போட்செப்ஸ்ட்ரூம் ஆகிய நகரங்களில் எதிர்வரும் 19ஆம் திகதி வரை தொடரின் போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்தப் தொடரில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் களம் காணும் அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் அவுஸ்ரேலியா, பங்களாதேஷ், இலங்கை, அமெரிக்கா, ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், ருவாண்டா, சிம்பாப்வே, ‘சி’ பிரிவில் அயர்லாந்து, இந்தோனேசியா, நியூஸிலாந்து, மேற்கிந்திய தீவுகள், ‘டி’ பிரிவில் இந்தியா, தென்னாபிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்கொட்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகள் மொத்தம் 12 அணிகள் சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி பெறும். இவை சுப்பர் சிக்சில் தலா 6 அணிகள் வீதம் பிரிக்கப்பட்டு போட்டியிடும். சுப்பர் சிக்சில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதியை எட்டும்.

அரையிறுதி போட்டிகள் 27ஆம் திகதியும் இறுதிப்போட்டி 29ஆம் திகதி போட்செப்ஸ்ட்ரூமில் நடைபெறவுள்ளது.

தொடரின் ஆரம்ப போட்டியில், தொடரை நடத்தும் தென்னாபிரிக்கா அணியும் இந்தியா அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here