கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகின்றது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று(செவ்வாய்கிழமை) நடைபெற்ற காலிறுதி போட்டி ஒன்றில் செக் குடியரசின் மேரி பவுஸ்கோவா, துனீசியாவின் ஒன்ஸ் ஜபீருடன் மோதினார்.

இதில் 3-6, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற ஒன்ஸ் ஜபீர் அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதி போட்டியில் தரவரிசையில் 97-வது இடத்திலுள்ள ஜேர்மனியின் ஜூலி நீமையர், சக வீராங்கனை தட்ஜனா மரியாவுடன் மோதினார்.

இதில் தட்ஜனா மரியா 4-6, 6-2, 7-5 என்ற நேர் செட்டில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here