இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான 5-வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்றது.

இறுதி நாளான நேற்று, 378 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை வெற்றிகரமாக துரத்திய இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் டெஸ்ட் தொடர் 2-2 என சமனில் முடிந்ததால் இரு அணிகளும் கிண்ணத்தினை பகிர்ந்து கொண்டன.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக இறுதி டெஸ்ட் போட்டியில் கொடுக்கப்பட்ட நேரத்தில் இருந்து மெதுவாக ஓவர் வீசியதற்காக இந்திய வீரர்களின் போட்டி ஊதியத்தில் இருந்து 40 சதவீதம் அபராதம் விதித்து ஐ.சி.சி உத்தரவிட்டுள்ளது.

மேலும், டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலிலும் 2 புள்ளிகளை இந்திய அணி இழக்கும் என ஐ.சி.சி தெரிவித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here