இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் மைக்கேல் பிரேஸ்வெல் 16ஆவது வீரராக இணைக்கப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் விளையாடிவிட்டு திங்கட்கிழமை லண்டன் வந்தடைந்த ட்ரென்ட் போல்ட் முதல் டெஸ்டில் இடம்பெற வாய்ப்பில்லை.

ஆரம்ப 20 வீரர்கள் கொண்ட அணியில் இருந்து ஜேக்கப் டஃபி, பிளேயர் டிக்னர் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கேன் வில்லியம்சன் தலைமையிலான அணியில், டொம் ப்ளூன்டெல், ட்ரென்ட் போல்ட், டெவோன் கான்வே, கொலின் டி கிராண்ட்ஹோம், கேம் பிளெட்சர், மெட் ஹென்றி, கெய்ல் ஜேமிசன், டொம் லதம், டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், அஜாஸ் படேல், டிம் சவுத்தி, நெய்ல் வாக்னர், வில் யங், மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் ஜூன் 2ஆம் திகதி லண்டனில் உள்ள லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here