ஸ்பேனீஷ் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், ரெட் புல் அணியின் மேக்ஸ் வெஸ்டர்பன் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

நடப்பு ஆண்டுக்கான ‘பார்முயுலா 1’ கார் பந்தயத் தொடர், 23 சுற்றுகளாக ஒவ்வொரு நாடுகளில் நடைபெறுகின்றது.

இதன்படி, நடப்பு ஆண்டின் ஆறாவது சுற்றான ஸ்பேனீஷ் கிராண்ட் பிரிக்ஸ், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பார்சிலோனா- கட்டலோனியா சர்வதேச ஓடுதளத்தில் நடைபெற்றது.

இதில் 308.424 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி, 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.

இதில் ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன், பந்தய தூரத்தை 1 மணித்தியாலம் 37 நிமிடங்கள் 20.475 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார். இதற்காக அவருக்கு 25 புள்ளிகள் வழங்கப்பட்டது.

அவரை விட 13.072 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த, ரெட் புல் அணியின் செர்ஜியோ பெரெஸ் இரண்டாவது இடத்தை பெற்றார். அத்தோடு அவர், இரண்டாம் இடத்திற்கான 19 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டார்.

32.927 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த, மெர்சிடஸ் அணியின் ஜோர்ஜ் ரஸ்ஸல் மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கு அவருக்கு 15 புள்ளிகள் வழங்கப்பட்டது.

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள ஆறு சுற்றுகளின் முடிவில், ரெட் புல் அணியின் மேக்ஸ் வெஸ்டர்பன் 4 சம்பியன் பட்டங்களுடன் 110 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

பெர்ராரி அணியின் சார்லஸ் லெக்லெர்க், இரண்டு சம்பியன் பட்டங்களுடன் 104 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ரெட் புல் அணியின் செர்ஜியோ பெரெஸ் 85 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

பர்முயுலா-1 கார்பந்தயத் தொடரின் ஏழாவது சுற்றான மொனோகோ கிராண்ட் பிரிக்ஸ், எதிர்வரும் 29ஆம் திகதி மொனோகோ கிராண்ட் பிரிக்ஸ், சர்வதேச ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here