ஒவ்வொரு நாடுகளிலும் நடைபெறும் தனித்துவமான கால்பந்து லீக் தொடர்கள், தற்போது நிறைவுக்கு வந்துள்ளன.
இதன்படி, இத்தாலியில் நடைபெறும் மிகவும் பழமை வாய்ந்த செர்ரீ- ஏ கால்பந்து லீக் தொடர் நிறைவுக்கு வந்துள்ளது.

இதில் 2021-22ஆம் ஆண்டு பருவக்காலத்துக்கான தொடரில், ஏ.சி.மிலான் அணி 19ஆவது முறையாக சம்பியன் பட்டத்தை தன் வசப்படுத்தியுள்ளது.

நடப்பு தொடரில் ஏ.சி.மிலான் அணி, 38 போட்டிகளில் 26 வெற்றி, 8 சமநிலை, 4 தோல்விகள் அடங்களாக 86 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

10 ஆண்டுகளுக்கு பிறகு ஏ.சி.மிலான் அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதுதவிர, 16 முறை இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.

இதன்மூலம் செர்ரீ- ஏ கால்பந்து லீக் வரலாற்றில் 36 முறை சம்பியன் பட்டம் வென்ற அணியான ஜூவெண்டஸ் அணிக்கு அடுத்த படியாக இன்டர் மிலான் அணியுடன் ஏ.சி.மிலான் அணி இரண்டாவது இடத்தை பகிர்ந்துக்கொண்டுள்ளது.

இதற்கு அடுத்தப்படியாக, 2021-22ஆம் ஆண்டு பருவக்காலத்துக்கான தொடரில், 84 புள்ளிகளுடன் இன்டர் மிலான் அணி இரண்டாவது இடத்தையும், நபோலி அணி 79 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பகிர்ந்துக்கொண்டுள்ளது.


இதற்கு அடுத்தப்படியாக இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில், மன்செஸ்டர் சிட்டி அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இதில் 2021-22ஆம் ஆண்டு பருவக்காலத்துக்கான தொடரில், மன்செஸ்டர் சிட்டி அணி, 38 போட்டிகளில் 29 வெற்றி, 6 சமநிலை, 3 தோல்விகள் அடங்களாக 93 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

நடப்பு சம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கிய மன்செஸ்டர் சிட்டி அணி, இதுவரை எட்டு முறை சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

ஒரு புள்ளியில் சம்பியன் கிண்ணத்தை தவறவிட்ட லிவர்பூல் அணி, இரண்டாவது இடத்தையும், செல்சியா அணி 74 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.


பிரான்ஸில் நடைபெறும் லீக்-1 கால்பந்து தொடரில், பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இதில் 2021-22ஆம் ஆண்டு பருவக்காலத்துக்கான தொடரில், பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி, 38 போட்டிகளில் 26 வெற்றி, 8 சமநிலை, 4 தோல்விகள் அடங்களாக 86 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

லீக்-1 கால்பந்து தொடரில், பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணியின் 10ஆவது சம்பியன் பட்டமாகும். அத்துடன் அந்த அணி 9 முறை இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.

நடப்பு தொடரில் மார்சிலே அணி 71 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும் மொனோக்கோ அணி, 69 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here