இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் நேற்றைய டெல்லி கப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களை பெற்றது.

இதனை அடுத்து 160 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றிபெற்றது.

மும்பை அணியின் இந்த வெற்றியின் மூலம், டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி பிளோ ஓப் சுற்றுக்கான வாய்பை இழந்ததுடன், பெங்களுர் அணி பிளோ ஓப் சுற்றுக்கு முன்னேறியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here