இத்தாலி பகிரங்க டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

ரோம் நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், கிரேக்கத்தின் ஸ்டெபீனோஸ் சிட்ஸிபாசை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், நோவக் ஜோகோவிச், 6-0, 7(7)-6(5) என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தை வென்றார்.

நோவக் ஜோகோவிச்சின் ஆறாவது சம்பியன் பட்டம் இதுவாகும். முன்னதாக 2008, 2011, 2014, 2015, 2020ஆம் ஆண்டுகளில் ஜோகோவிச் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

அத்துடன், இந்த வெற்றியின் மூலம் 370ஆவது வாரமாக டென்னிஸ் உலகின் முதல் வீரர் என்ற இடத்தை அவர் உறுதி செய்துள்ளார்.

மேலும், இந்த தொடரின் அரையிறுதி போட்டியில், நோர்வேயின் காஸ்பர் ரூட்டை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டென்னிஸ் போட்டியில் 1,000ஆவது வெற்றியை அவர் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here