அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கட் வீரர் எண்ட்ரூ ஸிமண்ட்ஸ், குயின்ஸ்லாந்தில் இடம்பெற்ற சிற்றுாந்து விபத்து ஒன்று கொல்லப்பட்டார்.
அவுஸ்திரேலிய அணி இரண்டு தடவைகளாக உலக கிண்ணத்தை வெற்றிக்கொண்ட போது அந்த அணியில் எண்ட்ரூ ஸிமண்ட்ஸ் இடம்பெற்றிருந்தார்.
சனிக்கிழமை இரவு 11 மணியளவில் ஹெர்வி ரேஞ்ச் சாலையில் இடம்பெற்ற விபத்திலேயே அவர் பலியானார்.
52 வயதில் முன்னாள் வீரர், சேர்ன் வோர்ன் மற்றும் 74 வயதில் விக்கெட் காப்பாளர் ரொட் மார்ஷ் இருவரும் மாரடைப்பால் இறந்த இரண்டு மாதங்களுக்குப் பின்னரே எண்ட்ரூ ஸிமண்ஸின் மரணம் சம்பவத்துள்ளது
ஷிமண்ட்ஸ் அவுஸ்திரேலியாவுக்காக 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 40.61 சராசரியில் 1462 ஓட்டங்களை பெற்றுள்ளாார்.
198 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி 5088 ஓட்டங்களை பெற்றுள்ள அவர் 133 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.