இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள வியாகுலமான நிலைமையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப் பயணம் தொடர்பான மீளாய்வு செய்யுமாறு அந்நாட்டு அரச அதிகாரிகள், கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை யிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனடிப்படையில் இலங்கைக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி, அதனுடன் உருவாகியுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக, இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவது சம்பந்தமாக மீளாய்வு செய்யுமாறு அவுஸ்திரேலிய வெளிவிவகார திணைக்களம் விடுத்த அறிவிப்புக்கு அமைய, அரச அதிகாரிகள், கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இதற்கு முன்னர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் முன்னர், அந்நாட்டு வெளிவிவகார திணைக்களம், கிரிக்கெட் போட்டிகள் தொடர்பில் இப்படியான எச்சரிக்கை விடுத்திருந்தது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறையான நிலைமை

இந்த வார ஆரம்பத்தில் சில தினங்களில் இலங்கைக்குள் ஏற்பட்ட வன்முறையான நிலைமை காரணமாக இலங்கையின் நிலைமைகள் சம்பந்தமாக மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் ஏற்படும் நிலைமை குறித்து வெளிவிவகார திணைக்களத்தின் ஆலோசனைகளை பெற்று செயற்பட்டு வருவதாக அவுஸ்திரேலிய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் பேச்சாளர் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

இலங்கைக்கு வர தயங்கும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி

 

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமை, அதில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் தொடர்பாக நாங்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடனும் அடிக்கடி தொடர்புக்கொண்டு அடுத்த நடவடிக்கைகள் பற்றிய திட்டங்களை வகுக்க எதிர்பார்த்துள்ளோம்.

தினமும் இலங்கையில் ஏற்படும் நிலைமைகள் சம்பநதமாக இலங்கை கிரிக்கெட் சுற்றுப் பயணத்தில் இணைந்துக்கொள்ள உள்ள வீரர்கள், பயிற்சியாளர்களை தெளிவுப்படுத்தி வருகின்றோம். அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு புறப்பட்டுச் செல்ல இன்னும் மூன்று வாரங்கள் இருக்கின்றன.

போட்டிகள் நடக்குமா? நடக்காதா?

 

இதனால், போட்டிக்கான நிகழ்ச்சி நிரல் மற்றும் திட்டங்களை மாற்றும் தேவை ஏற்படாது எனவும் அந்த பேச்சாளர் கூறியுள்ளார். அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது.

திட்டமிடட வகையில் இந்த சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள முடியும் என நம்புவதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை கடந்த 9 ஆம் திகதி வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறியிருந்தது.

அதேவேளை இலங்கையில் காணப்படும் பாதுகாப்பு நிலைமைகள் சம்பந்தமாக மீளாய்வு செய்ய கிரிக்கெட்டு கட்டுப்பாட்டுச் சபை நடவடிக்கை எடுக்கும் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் பாதகாப்பு அதிகாரி ஸ்டுவர்ட் பொலி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

இலங்கைக்கு வர தயங்கும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி

2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதுடன் ஜூன் 7 ஆம் திகதி இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டிகள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மூன்று 20க்கு 20 போட்டிகள், ஐந்து ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன.

அத்துடன் அவுஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அணியுடன் அவுஸ்திரேலிய ஏ கிரிக்கெட் அணியும் இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள உள்ளமை சிறப்பம்சமாகும்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here