இத்தாலி பகிரங்க டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில், இத்தாலியின் ஃபேபியோ ஃபோக்நினி வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில், இத்தாலியின் ஃபேபியோ ஃபோக்நினி, ஒஸ்திரியாவின் டொமினிக் தியேமை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை ஃபேபியோ ஃபோக்நினி, 6-4 எனக் கைப்பற்றினார்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், ஃபேபியோ ஃபோக்நினிக்கு டொமினிக் தியேம் கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் செட் டை பிரேக் வரை நீண்டது.

எனினும், அந்த நெருக்கடிகளை திறம்பட சமாளித்த ஃபேபியோ ஃபோக்நினி, 7-6 என செட்டைக் கைப்பற்றி, இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here