மட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் வெற்றிபெற்று ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிமை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதேபோல இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இப்போட்டியில், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவும் துனிசியாவின் ஒன்ஸ் ஜபீரும் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here