பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான திமுத் கருணாரத்ன தலைமையிலான 18 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 8 ஆம் திகதி பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி 02 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

அதன்படி திமுத் கருணாரத்ன தலைமையிலான அணியில் கமில் மிஷார, ஓஷத பெர்னாண்டோ, அஞ்சலோ மத்யூஸ், குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, தினேஷ் சந்திமால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் கமிந்து மெண்டிஸ், ரமேஷ் மெண்டிஸ், சாமிக்க கருணாரத்ன, சுமிந்த லக்ஷன், கசுன் ராஜித, விஷ்வ பெர்னாண்டோ, அசித பெர்னாண்டோ, தில்ஷான் மதுஷங்க, பிரவீன் ஜெயவிக்ரம, லசித் எம்புல்தெனிய ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here