செம்மண் தரையில் நடைபெறும் மட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில், டெனிஸ் ஷபோவலோவ் வெற்றிபெற்றதோடு, கரேன் கச்சனோவ் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில், கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ், பிரான்ஸின் உகோ ஹம்பர்ட்டை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், டெனிஸ் ஷபோவலோவ், 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில், ரஷ்யாவின் கரேன் கச்சனோவ், பிரான்ஸின் லூகாஸ் பூயிலுடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், லூகாஸ் பூயில், 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here