நவம்பர் மாதம் இடம்பெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை இரத்து செய்ய அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை பரிசீலித்து வருகிறது.

தமது நாட்டு பெண்கள் எந்த விதமான விளையாட்டுகளிலும் பங்கேற்க மாட்டார்கள் என தலிபான்கள் நேற்று தெரிவித்தனர்.

இந்நிலையில் தலிபான் ஆட்சியில் பெண்கள் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கப்படாவிட்டால் போட்டியை இரத்து செய்ய தீர்மானிக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் கிரிக்கெட் ஒரு விளையாட்டு என்பதனால் உலக அளவில் மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சியை எப்போதும் அவுஸ்ரேலியா கிரிக்கெட் சபை ஊக்குவிக்கும் என்றும் அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் சர்வதேச அளவில் பதிவு செய்யப்பட்ட ஒரே அணியாக இருந்தாலும், பெண்கள் கிரிக்கெட் அணியைக் கொண்டிருக்கவில்லை.

கடந்த ஆண்டு, தலிபான்கள் பொறுப்பேற்பதற்கு முன்பு, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை ஒரு சர்வதேச அணியை உருவாக்க விரும்புவதாக தெரிவித்து பெண்களுக்கான முதல் ஒப்பந்தங்களை அறிவித்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here