ரி-20 உலகக்கிண்ண தொடருக்கான எதிர்பார்ப்பு மிக்க இந்தியக் கிரிக்கெட் அணி விபரம், அறிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியில், ஷிகர் தவான், யுஸ்வேந்திர சாஹல், பிரத்வீ ஷா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அதேவேளை அணியின் முன்னாள் தலைவரான மகேந்திர சிங் டோனி, அணியின் வழிகாட்டியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

விராட் கோஹ்லி தலைமையிலான அணியில், ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பநத், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரிட் பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் தவிர மாற்று வீரர்களாக ஸ்ரேயாஸ் அய்யர், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

16 நாடுகள் பங்கேற்கும் ரி-20 உலகக்கிண்ண தொடர், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி முதல் நவம்பர் 14ஆம் திகதி வரை நடைபெறுகின்றது.

இந்தியக் கிரிக்கெட் அணி, தனது முதல் போட்டியில், பாகிஸ்தான் அணியை ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி எதிர்கொள்கின்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here