இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 78 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்த இலங்கை அணி 203 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்நிலையில், 204 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெத்தாடிய தென்னாபிரிக்க அணி 30 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 125 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை, இலங்கை அணி 2 – 1 என்ற அடிப்படையில் கைப்பற்றியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here